Header Ads

  • Breaking News

    பேசிக் ஐஸ்கிரீம்


     பேசிக் ஐஸ்கிரீம்


    தேவையான பொருட்கள் :


    பொருள் - அளவு

    கொழுப்பு நீக்கப்படாத பால் 2 லிட்டர்

    சோள மாவு4 டீ ஸ்பு+ன்

    சர்க்கரை2 கப்

    ப்ரெஷ் கிரீம்2 கப்

    செய்முறை :


    🍨 பேசிக் ஐஸ்கிரீம் செய்வதற்கு முதலில் பாலில் சோளமாவை கரைத்து வைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு அதில் சர்க்கரையைச் சேர்த்து கிளறவும்.


    🍨 பால் பாதியாகச் சுண்டியதும், கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி நன்கு கரண்டியால் கட்டியாகாதவாறு கிளறி பத்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, கலவை நன்றாக ஆறியதும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி ப்ரீசரில் வைக்கவும்.


    🍨 ஒரு 3 மணிநேரம் கழித்து, வெளியே எடுத்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, அதில் கிரீமைச் சேர்த்து, நன்கு கலக்கி மீண்டும் பிரீசரில் செட் செய்யவும். சுவையான பேசிக் ஐஸ்கிரீம் ரெடி. 






    No comments

    Post Top Ad

    Post Bottom Ad